Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாம்பரம் - கிளாம்பாக்கம் புதிய வழித்தடம்.. புதிய பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு..!

Siva
வியாழன், 17 ஏப்ரல் 2025 (08:02 IST)
போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்  பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு புதிய பேருந்து சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது தாம்பரத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை புதிய வழித்தடத்தில் ‘தடம் எண் 55-பி’ என்ற பேருந்து சேவை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
 
இந்த புதிய சேவை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, பழைய பெருங்களத்தூர், மண்ணிவாக்கம் கூட்ரோடு, ரூபி பில்டர்ஸ், ஸ்ரீ நிகேதன் பள்ளி, காசா கிராண்ட், கணேஷ் நகர், படப்பை சந்திப்பு, ஆதனூர், கிரவுன் பேலஸ், அண்ணா நகர், செல்வராஜ் நகர், ஊரப்பாக்கம் ரயில் நிலையம், ஆதனூர் பிரதான சாலை, வண்டலூர் பூங்கா மற்றும் ஊரப்பாக்கம் பள்ளி வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை செல்லும்.
 
இதேபோல், கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரத்துக்கும் இந்த பேருந்து சென்று பயணிகளை சேவையளிக்கும்.
 
பேருந்து புறப்படும் நேரங்கள்:
 
தாம்பரத்தில் இருந்து: காலை 7.10, மதியம் 12.00, பிற்பகல் 3.50, மாலை 6.15
 
கிளாம்பாக்கத்தில் இருந்து: காலை 8.15, பிற்பகல் 1.20, மாலை 5.00, இரவு 7.25
 
இந்த புதிய சேவையால், தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் பகுதிகளை சேர்ந்த மக்கள், எளிதாக பயணம் செய்யும் வசதியை பெற முடியும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments