சென்னை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செலும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தென் மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த அனைத்து பேருந்துகளும் இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இன்று முதல் இந்த திட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.