இந்தியாவில் முதல்முறையாக எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம்.. பயணிகள் வரவேற்பு..!

Siva
வியாழன், 17 ஏப்ரல் 2025 (07:55 IST)
இந்தியாவில் முதல்முறையாக எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் மெஷின் நிறுவப்பட்டுள்ள நிலையில், இதற்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் இயக்கப்படும் பஞ்சவாடி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரிசோதனை முறையில் ஏடிஎம் மிஷின் வைக்கப்பட்டதாகவும், இது பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றால், இன்னும் சில ரயில்களிலும் ஏடிஎம் மிஷின் வைக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
தனியார் வங்கி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த குளிர்சாதன வசதி உள்ள ஏடிஎம்மில், பயணிகள் தேவைக்கு பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றும், சில இடங்களில் சிக்னல் பிரச்சனை காரணமாக ஏடிஎம் எந்திரம் இயங்காது என்றும், சுரங்கப்பாதை வழியாக செல்லும் போதும் ஏடிஎம் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்றும், இந்த சிக்கல்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
ஆனால் பெரும்பாலான நேரங்களில் ஏடிஎம் வேலை செய்வதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். பேங்க் ஆப் மகாராஷ்டிரா இந்த ஏடிஎம் ஐ நிறுவியுள்ளதாகவும், ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
ரயில்வே துறையின் இந்த முயற்சிக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அடுத்தடுத்து பல ரயில்களில் இதேபோன்று ஏடிஎம் மிஷின்கள் நிறுவப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
 Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments