Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா வைரஸ்: ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்படுவது இது முதல் முறையா? - அண்மைய சர்வதேச தகவல்கள் Corona Global updates

கொரோனா வைரஸ்: ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்படுவது இது முதல் முறையா? - அண்மைய சர்வதேச தகவல்கள் Corona Global updates
, செவ்வாய், 24 மார்ச் 2020 (22:22 IST)
கொரோனா வைரஸ்: ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்படுவது இது முதல் முறையா? -

கொரொனா வைரஸ் தொற்றால் சர்வதேச அளவில் 383, 944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,767 பேர் பலியாகி உள்ளனர்.

சீனா, இத்தாலிக்கு அடுத்து அதிகபட்சமாக அமெரிக்காவில்தான் அதிக பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அங்கு மட்டும் 46,450 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
 
ஒலிம்பிக் போட்டிகள்
 
கொரோனா தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்குத் தள்ளி வைக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடப்பதாக இருந்தது ஒலிம்பிக் போட்டிகள்.

கொரோனா அச்சம் காரணமாக கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப மாட்டோம் எனக் கூறி இருந்தன.

ஜப்பான் அரசும் ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளி வைக்கும்படி கோரி இருந்தது.

இந்த நிலையில் ஒலிம்பிக் அமைப்பு போட்டிகளை ஓராண்டு தள்ளி வைக்க ஒப்புக் கொண்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் பிரதமர் அபே, "சர்வதேச ஒலிம்பிக் குழு போட்டிகளைத் தள்ளி வைக்க ஒப்புக் கொண்டது," என்றார்.

ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் முறை.

இதற்கு முன்பாக ஒலிம்பிக் போட்டி போர் காலத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், தள்ளி வைக்கப்படுவது இதுவே முதல் முறை.

பாலத்தீனத்தின் நிலைமை என்ன?

பாலதீனத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

உலகத்தில் குறுகிய இடத்தில் மக்கள் அடர்த்தியாக வாழும் இடங்களில் காஸா பகுதியும் ஒன்று.

2007ஆம் ஆண்டு ஹமாஸ் கட்டுப்பாட்டில் இந்த பகுதி சென்றதிலிருந்து இந்த பகுதியை இஸ்ரேலும், எகிப்தும் முடக்கி உள்ளது.


இப்படியான சூழலில் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சிரமமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

ஆனால் அதே நேரம் அந்த பகுதி பல ஆண்டு காலமாகத் தனிமைப்படுத்தப்பட்டே வருகிறது. இதன் காரணமாக அங்கு கொரோனா பரவல் அபாயம் குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக அடுத்த ஆறு மாத கால பாலத்தீனத்திற்கு 150 மில்லியன் டாலர்களைத் தருவதாக கத்தார் உறுதி அளித்துள்ளது.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் பாதிப்பு !