Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிலிண்டர் தட்டுப்பாடு!.. நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் அல்வா தயாரிப்பது நிறுத்தம்!...

Advertiesment
nellai
ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தும் போர் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் வருவது தடைபட்டிருக்கிறது. கச்சா எண்ணெய் வைத்துதான் சமையலுக்கு தேவையான சிலிண்டர் போன்றவை உற்பத்தி செய்யப்படுவதால் இந்தியா முழுவதும் வணிக சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒருபக்கம் வளைகுடா நாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய் கப்பல்களை ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஈரான் அனுமதி அளிக்கவில்லை..

எனவே, இந்தியா பல நாடுகளில் இருந்தும் கச்சா எண்ணெய் கொண்டு வரும் முயற்சியில் இறங்கி இருக்கிறது அதேநேரம் தற்போது இந்திய மக்களுக்கு தேவையான எரிபொருள் முழுமையாக கிடைக்கவில்லை. ஏற்கனவே, வணிக சிலிண்டர் கிடைக்காமல் இந்தியாவில் பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல ஹோட்டல்கள் மூடும் நிலை ஏற்பட்டிருக்கிறாது.  ஏற்கனவே பல சின்ன சின்ன ஹோட்டல்களும், உணவுகளும் மூடப்பட்டு விட்டது..

இந்நிலையில், சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக நெல்லையில் பிரபல சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் அல்வா தயாரிக்கப்படுவது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கையிருப்பில் உள்ள அல்வா விற்று தீர்ந்தபின் சாந்தி ஸ்வீட்ஸ் கடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது, இந்த செய்தி நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் கடையின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பானை சின்னத்தில்தான் போட்டி.. திமுகவுக்கு செக் வைத்த திருமாவளவன்!...