Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெல்லையில் வீடுகளை உடைத்து தொடர் கொள்ளை - அதிரடி கைது!

நெல்லையில் வீடுகளை உடைத்து தொடர் கொள்ளை - அதிரடி கைது!
, திங்கள், 14 மார்ச் 2022 (11:38 IST)
நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ரஹ்மத் நகர் மற்றும் மார்க்கெட் பகுதியில் அடுக்கு மாடி வீடுகளில், கடந்த 27-01-2002 ம் தேதி மற்றும் 03-03-2022 ஆகிய தேதிகளில் பகல் நேரத்தில், வீட்டை உடைத்து நடந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.
 
இது தொடர்பாக, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திரு.A.T.துரைக்குமார் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர்  திரு.T.P.சுரேஷ்குமார் அவர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் திரு.பாலமுருகன் அவர்கள், மற்றும் திரு.அண்ணாதுரை அவர்கள் ஆகியோர்களின் உத்தரவின்படி, குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.பிராங்கிளின் அவர்கள் தலைமையிலான குற்றப்பிரிவு தனிப்படை போலிசார் சைபர் கிரைம் மற்றும் CCTV கேமரா உதவியுடன் தீவிரமாக தேடிவந்தனர். 
 
இந்த நிலையில், மேற்படி குற்றச்செயலை செய்த பழங்குற்றவாளி தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (38) மேற்படி குற்றவாளியை கைது செய்து வழக்கின் சொத்துக்களான நகையை மீட்டும் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை (HONDA GRAZIA) கைப்பற்றியும் 12-03-2022ம் தேதியன்று  சிறையில் அடைத்தர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் TET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு!