Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெல்லை பள்ளி சுற்றுச்சுவர் இடிந்த வழக்கு: பள்ளி நிர்வாகிகள் மீதான வழக்கு ரத்து

Advertiesment
நெல்லை பள்ளி சுற்றுச்சுவர் இடிந்த வழக்கு: பள்ளி நிர்வாகிகள் மீதான வழக்கு ரத்து
, வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (11:47 IST)
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நெல்லையில் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது 
 
இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியை மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது 
 
மனுதாரர் இரண்டு பேருமே விபத்து நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் அந்த பள்ளியில் பொறுப்பேற்றுள்ளனர் என்பதால் இவர்கள் இருவரும் இந்த விபத்திற்கு பொறுப்பேற்க முடியாது என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது 
 
இந்த மனுவில் கூறப்பட்டு இருந்த சாராம்சத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற கிளை நீதிபதி நெல்லையில் சுற்றுசுவர் இடிந்து மாணவர்கள் இறந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியை ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடியரசுத் தலைவர் பதவிக்கு தமிழரை நிறுத்துங்கள்: முதல்வருக்கு ரவிகுமார் எம்பி வலியுறுத்தல்!