Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

Mahendran

, செவ்வாய், 21 மே 2024 (10:20 IST)
திருநெல்வேலியில் மீண்டும் ஒரு சாதிய தீண்டாமை படுகொலை என பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து  நீலம் பண்பாட்டு மையம் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
 
திருநெல்வேலியில் மீண்டும் ஒரு சாதிய தீண்டாமை படுகொலை, இதை நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு பாளையங்கோட்டை சிறையில் சாதிவெறி கும்பல்களால்  படுகொலை செய்யப்பட்ட முத்துமனோவின் நண்பர்
பட்டியலின தேவேந்திர குலவேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர் தீபக்ராஜா பாளையங்கோட்டையில் உணவகத்திற்கு முன்பு படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அவலம்
 
சக மனிதனை படுகொலை செய்யும் மறவர் சமூகத்தை சேர்ந்த சாதிவெறி பிடித்த குற்றவாளிகளை உடனடியாக  எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கிட வேண்டும் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஆனால் இந்த பதிவுக்கு நெட்டிசன் பதிலடி கொடுத்த போது ’கொலை செய்யப்பட்டவர் ஒரு ரவுடி என்றும் அவர் மீது ஏகப்பட்ட கொலை வழக்குகள் இருக்கிறது என்றும் ஒரு கொலைகாரனுக்காக சாதிவெறி என்ற அம்சத்தை தூக்கிக் கொண்டு வருவது நியாயமல்ல என்றும் பதிவு செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?