கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கேரளாவின் சட்டக்கல்லூரி மாணவி வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா என்பவர் புலம்பெயர் தொழிலாளி ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இன்று குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்த போது கேரள மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் பல அரசியல் கட்சி தலைவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினார் என்பதும் திரையுலக பிரபலங்களும் நீதி கேட்டு குரல் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி அமீர் உல் இஸ்லாம் என்பவர் தான் குற்றவாளி என தெரிய வந்துள்ளதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 8 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.