Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

Advertiesment
Child

Senthil Velan

, ஞாயிறு, 19 மே 2024 (16:03 IST)
சென்னை திருமுல்லைவாயலில்  கடந்த மாதம் 28ம் தேதி  பால்கனியில் தவறி குழந்தை மீட்கப்பட்ட நிலையில்,  தற்போது அந்த குழந்தையின் தாயார்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் வெங்கடேசன் - ரம்யா. இத்தம்பதிக்கு 7 மாதமான ஹைரின் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி குழந்தை ஹைரினுக்கு தாய், பால்கனியில் வைத்து உணவு ஊட்டிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக குழந்தை தவறி பால்கனி கூரையில் விழுந்தது.
 
அப்போது குழந்தை மேற்கூரையிலிருந்து வழுக்கி கீழே விழ இருந்த நிலையில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் இணைந்து துரிதமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டனர்.  இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

 
இந்நிலையில் அந்த குழந்தையின் தாய் ரம்யா, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த காரமடையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.  இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!