Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘ரஜினி விருப்பப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்’ - நயினார் நாகேந்திரன்!

‘ரஜினி விருப்பப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்’ - நயினார் நாகேந்திரன்!
, வியாழன், 3 செப்டம்பர் 2020 (19:56 IST)
ரஜினிகாந்த் விருப்பப்பட்டால் கட்சி ஆரம்பித்த உடன் பாஜக உடன் கூட்டணி அமைக்கலாம் என பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அடுத்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் மாற்றுக் கட்சிகளில் இருந்து பிரமுகர்களை இணைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பாஜக தற்போது ரஜினிக்கும் வலைவிரித்து உள்ளது
 
ரஜினிகாந்த் அரசியல் கட்சியைத் தொடங்கி தேர்தலில் சந்திப்பதாக இருந்தால் அவர் விருப்பப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என நயினார் நாகேந்திரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஏற்கனவே ரஜினியை பாஜக ஆதரவாளர் என்று பலர் கூறி வரும் நிலையில் அவர் அவர் அரசியல் கட்சியை ஆரம்பிப்பாரா? அப்படியே ஆரம்பித்தாலும் பாஜகவுடன் கூட்டணி வைப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் மீண்டும் 1000க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் எவ்வளவு?