Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வந்து போக கார் கொடுகலாம்ல... ஸ்டாலினிடம் நயினார் கோரிக்கை!

Advertiesment
வந்து போக கார் கொடுகலாம்ல... ஸ்டாலினிடம் நயினார் கோரிக்கை!
, வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (12:52 IST)
மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் முதல்வரிடம் கோரிக்கை. 

 
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மு.க.ஸ்டாலின் நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு  சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு அளித்தனர். 
 
கார் கேட்ட நயினார் நாகேந்திரன்: 
முதல்வரின் இந்த அறிவிப்பை பாராட்டிவிட்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், முதல்வர் பார்வை ஊராட்சி உறுப்பினர்கள், பஞ்சாயத்து சேர்மன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வரை வந்திருக்கிறது. ஆனால் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அந்த பார்வை வரவில்லை. 
webdunia
எனக்கு இல்லனாலும் பரவாயில்லை தேவைப்படுகிற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நீங்கள் ஒரு கார் கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும். அரசு சார்பில் வட்டியில்லாமல் கடன் வழங்குகின்ற வகையிலாவது ஒரு கார் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். 
 
சபாநாயகர் அப்பாவு கமெண்ட்:
நயினார் நாகேந்திரனின் இந்த கோரிக்கையை கேட்ட பின் சபாநாயகர் அப்பாவு மத்திய அரசிடம் பரிந்துரை செய்து பணம் வாங்கி கொடுத்திடுங்க என்றார். அப்போது மு.க.ஸ்டாலின் சிரிக்கவே அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சிரித்தனர். பின்னர் அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என 110 விதியின் கீழ் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின்வெட்டு தொடர்பாக காரச்சார விவாதம்! – அதிமுக வெளிநடப்பு!