Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டிஊட்டச்சத்து விழிப்புணர்வுப் பேரணியை பச்சை கொடியசைத்துதொடங்கி வைத்தார்- அமைச்சர் கயல்விழி!

Advertiesment
தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டிஊட்டச்சத்து விழிப்புணர்வுப் பேரணியை பச்சை கொடியசைத்துதொடங்கி வைத்தார்-  அமைச்சர் கயல்விழி!

J.Durai

, வியாழன், 5 செப்டம்பர் 2024 (19:48 IST)
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி புதிய பேருந்து நிலையம் முன்பு தொடங்கி வைத்தார்.
 
பெண்கள், குழந்தைகளிடையே ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வை
ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாத விழாவாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
 
அதன்படி, தாராபுரத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நடைபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வுப் பேரணியில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
 
பின்னர், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி பேசியதாவது:
 
அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள், ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை, பள்ளிக்கல்வித் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் அரசின் பிற துறைகளுடன் ஒருங்கிணைத்து தேசிய ஊட்டசத்து மாத விழா செயல் படுத்தப்படுகிறது.
 
இதில், பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் திட்டம் குறித்த விழிப்புணர்வு வட்டார அலுவலகங்கள் மற்றும் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் செப்டம்பர் 1 முதல் 30 ஆம் தேதி வரை நடத்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகளின்கீழ் மாவட்டத்தில் 1472 அங்கன்வாடி மையங்களில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம் படுத்துவதற்காக ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப் படுகிறது என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி ஆசிரியர் தினவிழா கொண்டாடிய மாணவர்கள்!