Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போதை பழக்கம் இல்லாத தமிழகம்! – காவல்துறை விழிப்புணர்வு பேரணி!

போதை பழக்கம் இல்லாத தமிழகம்! – காவல்துறை விழிப்புணர்வு பேரணி!
, செவ்வாய், 14 நவம்பர் 2023 (14:53 IST)
சமீபத்தில் தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.


 
குறிப்பாக ஆந்திரா, ஒடிசா மற்றும் வட மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.

இளைய சமுதாயத்தினர் இந்த போதை பொருட்கள் பழக்கத்திலிருந்து மீட்பதற்காக தமிழக அரசு பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

காவல்துறை பல  நடவடிக்கைகள் எடுத்தாலும் பொதுமக்களும், இளைய சமுதாயத்தினரும் போதைப் பொருட்களின் தீங்கினை அறியும் வண்ணம்  தமிழக அரசு பள்ளி,கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் பல துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் கருத்தரங்கு,மாநாடு, பேரணி,ஊர்வலம் ஆகியவை தொடர்ந்து நடத்தி பொது மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

மேலும் போதைப் பொருட்களை கடத்து வருடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.

போதை பொருள் விழிப்புணர்வின் ஒரு பகுதியாக  காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து  போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு  இருசக்கர வாகன பேரணி தொடங்கியது.

இதில் ஒழிப்போம் ஒழிப்போம் போதைப் பொருளை ஒழிப்போம்

காப்போம் காப்போம் இளைய சமுதாயத்தினரை காப்போம் என பதவகைகளை ஏந்தியவாறு ஆண் பெண் என காவல்துறையினர் இந்த வாகன பேரணியில் கலந்து கொண்டனர்.

மக்கள் அதிகம் கூடும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக இந்த வாகனப் பேரணி நடைபெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 8 மாவட்டங்களுக்கு கனமழை: வானிலை எச்சரிக்கை