Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வால்பாறை பாலியல் விவகாரம் - அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவிப்பு!

Advertiesment
Coimbatore District Collector

J.Durai

, திங்கள், 2 செப்டம்பர் 2024 (14:53 IST)
தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை கடை பிடிக்கப்படுகிறது. இதில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும்.
இதனை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் ஒரு நாள் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெறுகிறது.
 
இந்த கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
 
இதன தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர்...... 
 
ஊட்டச்சத்து மாதம் குறித்து இந்த மாதம் முழுவதும் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.  கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அடிப்படை வசதிகள் இல்லாத பட்சத்தில் அதற்கான தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
 
வால்பாறை பாலியல் விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர்:
 
இது குறித்து துறை ரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மட்டுமல்லாமல் மேலும் நான்கு பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிப்பதாக தெரிவித்தார். மேலும் இது குறித்து அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்க உள்ளதாகவும் எங்கேனும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
 
முதலில் இந்த விவகாரத்தில் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தொடர்ந்து துறை ரீதியான நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கப்படும் என கூறினார். இது போன்ற புகார்கள் வருவதை நெகட்டிவாக பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.  இது போன்ற புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
 
சிசிடிவி கேமராக்கள் மற்றும் மின் விளக்குகளை அதிகரித்தாலே ஓரளவு பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என கூறுய அவர் தொடர்ந்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வந்தால் மக்களுக்கும் இது குறித்தான புரிதல்  கிடைக்கும் என தெரிவித்தார். மேலும் இது போன்ற குற்றங்கள் நிகழாமல் இருப்பதற்கும் அவ்வாறு ஏதேனும் நிகழ்ந்தால் அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும்  என தெரிவித்தார்.
 
பங்களாதேஷ் பகுதியில் இருந்து சிலர் சட்டவிரோதமாக கோவைக்கு வருவதாக புகார்கள் எழுப்பப்படுவது குறித்தான கேள்விக்கு:
 
அரசிடம் இருந்து வழிகாட்டு நெறிமுறைகள் வந்தால் அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபேஷன் மற்றும் டிசைனர் துறை மாணவர்களை ஊக்கப்படுத்தும்- ‘சோல் வாக் இன் ஃபேஷன்’ நிகழ்ச்சி!