கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 அன்று நடந்த கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.
ஆணையத்தின் தலைவர் கிஷோர் மாக்னா தலைமையிலான குழுவினர், இன்று வேலுச்சாமிபுரத்துக்கு நேரில் வருகை தந்தனர்.
கூட்ட நெரிசல் நடந்த இடத்தை ஆய்வு செய்த குழு, சம்பவம் குறித்த விவரங்களை உள்ளூர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் கேட்டறிந்தது.
உயிரிழந்தவர்களில் ஒருவரான துரு விஷ்ணுவின் வீட்டுக்கு சென்று, அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஆணையம் விசாரித்தது. சிறுவனின் தாய் காது, வாய் மாற்றுத்திறனாளி என்பதால், மற்ற குடும்பத்தினர் வாக்குமூலம் அளித்தனர்.
விஜய்யை பார்க்க அருகில் இருந்த சிறுவனை அவனது அத்தை அழைத்து சென்றபோது, அவன் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானதாக குடும்பத்தினர் விளக்கினர்.
இந்த விசாரணை, உயிரிழப்புகளின் காரணங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகத்தினரின் நிலை குறித்து ஆழமான ஆய்வு மத்திய அரசின் அழுத்தம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.