Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கபோதிகள், அடிமைகள்: எடப்பாடி தரப்பை திட்டி தீர்க்கும் நாஞ்சில் சம்பத்!

கபோதிகள், அடிமைகள்: எடப்பாடி தரப்பை திட்டி தீர்க்கும் நாஞ்சில் சம்பத்!

Advertiesment
கபோதிகள், அடிமைகள்: எடப்பாடி தரப்பை திட்டி தீர்க்கும் நாஞ்சில் சம்பத்!
, சனி, 16 டிசம்பர் 2017 (16:33 IST)
ஊடக நிகழ்ச்சிகளில் அதிமுக கட்சி சார்பில் பங்கேற்க எந்த ஒரு நபருக்கும் அனுமதியோ, ஒப்புதலோ அளிக்கப்படவில்லை என்று துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் கூட்டறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
 
சமீப காலமாக சிலர் ஊடகங்களில் பேசும் போது அரசின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க திணறி எக்குத்தப்பான கருத்தை கூறுகின்றனர். சில தோழமை கட்சியினரும் அதிமுக பெயரில் கலந்து கொண்டு தங்கள் கருத்தை அதிமுக கருத்தாக கூறுகின்றனர்.
 
இதனால் அதிமுக தலைமைக்கு சிக்கல்கள் வருகின்றன. அதனால் தான் ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக சேர்ந்து அறிக்கை வெளியிட்டு அதிமுகவினர் ஊடகங்களில் தலைகாட்டத் தடை விதித்துள்ளனர். இது குறித்து தினகரன் தரப்பை சேர்ந்த நாஞ்சில் சம்பத் கருத்துக்கூறியுள்ளார்.
 
பிரபல தமிழ் வார பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத்திடம், ஆளும் அதிமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்த நிலையில் அதிமுக சார்பில் கருத்து சொல்ல யாரும் நியமிக்கப்படவில்லை என்று அதிமுக சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதே? என கேள்வி கேட்கப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த நாஞ்சில் சம்பத், கருத்தே இல்லாத கபோதிகளுக்கு கருத்து சொல்றதுக்கு ஆள் எதற்கு வேணும். அடிமைகளுக்கு ஏதுங்க கருத்து? என அதிரடியாக எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பை திட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய ஆங்கில வார்த்தையை கண்டுபிடித்த 6 வயது சிறுவன்