Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் விஜய் தந்தை மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு!

Advertiesment
நடிகர் விஜய் தந்தை மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு!
, சனி, 16 டிசம்பர் 2017 (13:34 IST)
நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த நவம்பர் மாதம் கூறியிருந்த கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அவர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை மாநகர காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற விசிறி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய்-இன் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது என கூறியிருந்தார்.
 
அவரது இந்த கருத்து இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாகவும், இரு மதங்களுக்கிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக இந்து முன்னனியினர் கூறினார். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இந்து முன்னனி நிர்வாகி வி.ஜி.நாராயணன் நவம்பர் 25-ஆம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
 
ஆனால் புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆணையர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இந்து முன்னனி நிர்வாகி நாராயணன்.
 
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகாரில் முகாந்திரம் இருந்தால் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தை பெற்றெடுத்த ஆண்; ருசிகர சம்பவம்