நேற்றைய மதுரை தவெக மாநாட்டில் முதல்வரை விஜய் அங்கிள் என கூறிய நிலையில் இன்று நெல்லையில் அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன் கூறியதால் திமுகவினர் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
திருநெல்வேலியில் நடைபெற்ற பா.ஜ.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பேசிய நயினார் நாகேந்திரன் தி.மு.க. வாக்குறுதிகளைக் கொடுப்பது வழக்கம் என்றும், வெற்றி பெற்ற பிறகு அதை மறந்துவிடுவது வழக்கம் என்றார்.
மேலும் தி.மு.க. அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு, முதல்வர் மு.க. ஸ்டாலினை "ஸ்டாலின் அண்ணாச்சி" என்று குறிப்பிட்டுப் பல கேள்விகளை எழுப்பினார்.
"மீனவர்களுக்கு வீடு கட்டித் தருகிறோம் என்றீர்களே, என்னாச்சு?"
"பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்றீர்களே, என்னாச்சு?"
"மின் கட்டணத்தைக் குறைப்போம் என்றீர்களே, என்னாச்சு?"
"எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைப்போம் என்றீர்களே, என்னாச்சு?"
இவ்வாறு அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைத் "தர்மத்துக்கும் அதர்மத்துக்குமான போர்" என்றும், தி.மு.க. ஆட்சியை "குடும்ப ஆட்சி" என்று விமர்சித்த அவர், பா.ஜ.க. ஆட்சி "மக்களுக்கான ஆட்சி" என்று கூறினார்.