Publish Date: Thu, 12 Oct 2023 (14:30 IST)
Updated Date: Thu, 12 Oct 2023 (14:31 IST)
இன்று அதிகாலை இரண்டு ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் நேற்று இரவே என் மகனை என்கவுண்டர் செய்யப் போகிறார்கள், அவரை காப்பாற்றுங்கள் என்று ரவுடி முத்து சரவணன் தாயும் தந்தையும் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இன்று அதிகாலை செங்கல்பட்டு அருகே நடந்த என்கவுண்டரில் ரவுடி முத்து சரவணன் உள்பட 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது
போலீசாரை தாக்கி விட்டு ரவுடிகள் தப்பிக்க முயன்றதாகவும் போலீசார் தற்காப்புக்காக ரவுடிகளை சுட்டதாகவும் போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு ரவுடி முத்து சரவணன் பெற்றோர் உருக்கமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது அந்த வீடியோவில் அவர்கள் கூறியிருப்பதாவது
என் புள்ள தப்பானவன்னு தெரியாது ஐய்யா... அவனை சுட போறாங்கன்னு சொல்றாங்க.. காப்பாத்துங்க ஐய்யா.. என அவர்கள் பேசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.