Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் ஆய்வு..!

Advertiesment
என்கவுண்டர்
, வியாழன், 12 அக்டோபர் 2023 (12:32 IST)
இன்று காலை இரண்டு ரவுடிகள் செய்யப்பட்ட செய்யப்பட்ட நிலையில் என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘குற்றவாளிகளை பிடிக்க முயன்ற போது, போலீசாரை ரவுடிகள் தாக்க முயன்றுள்ளனர் என்றும், தற்காப்புக் கருதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது என்றும் தெரிவித்தார்,
 
மேலும் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட முத்து சரவணன் மீது 6 கொலை வழக்குகள் உள்ளன என்றும், குற்றவாளிகளால் தாக்கப்பட்ட 3 போலீசார் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் தெரிவித்தார்.
 
முன்னதாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்த போது இந்த என்கவுன்ட்டர் சம்பவம் நடந்தது. ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் துப்பாக்கி, சிதறி கிடக்கும் தோட்டாக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் பொன்முடி மனைவி பெயரில் இயங்கி வரும் நிறுவனத்தில் கொள்ளை.. போலீசார் விசாரணை