Publish Date: Thu, 12 Oct 2023 (14:24 IST)
Updated Date: Thu, 12 Oct 2023 (14:26 IST)
புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நேற்று தன் பதவியை ராஜினாமா செய்ததாக செய்தி வெளியான நிலையில் அவர் 3 நாட்களுக்கு முன்பே பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என புதுவை சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நேற்று தன் ராஜினாமா கடிதத்தை முதல்வர் ரங்கசாமிக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர ராஜனுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் இது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் செல்வம், சந்திரபிரியங்கா 3 நாட்களுக்கு முன்பிருந்தே பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற சந்திர பிரியங்கா, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran