Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போத்தீஸ் துணிக்கடை அருகில் கொடூர கொலை - தப்பி சென்ற நபர்கள் கைது

போத்தீஸ் துணிக்கடை அருகில் கொடூர கொலை - தப்பி சென்ற நபர்கள் கைது
, திங்கள், 20 நவம்பர் 2017 (14:10 IST)
போத்தீஸ் துணிக்கடை அருகில் ரவுடி ஒருவர் பழிக்குப் பழி வாங்கும் விவகாரத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன். இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இதில், ஒசூரை சேர்ந்த சுதாகர் என்பவை கொலை செய்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன்பின் அவர் உயிருக்கு பயந்து, புதுச்சேரியில் தலைமறைவாக இருந்துள்ளார். 
 
இந்நிலையில், இன்று காலை அவர் போத்தீஸ் துணிகக்டை அருகில் உள்ள இருசக்கர வானகத்தில் சென்று கொண்டிருந்த போது, அவரை ஒரு கார் மோதியது. அதில் நிலைதடுமாறி விழந்த கொளஞ்சியப்பனை, காரில் இறந்து இறங்கிய கும்பல் கத்தி மற்றும ரிவாலால் பயங்கரமாக தாக்கியது. இதில் தப்பி ஓடிய கொளஞ்சியப்பனை துரத்தி வெட்டி சாய்த்தது. அதன் பின் அங்கிருந்து அந்த கும்பல் காரில் ஏறி தப்பி சென்றது.
 
அதன் பின் காரில் சென்ற அந்த கும்பல் 20க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு சென்றது. எனவே, இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். எனவே, போலீசார் அவர்களின் வாகனத்தை துரத்தி சென்றனர். அவர்கள் கடலூரை நோக்கி சென்றதால், அந்தப்பகுதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஆல்பேட்டை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. 
 
அப்போது காரில் வந்த கொலையாளிகள் தடுப்புகளை மோதிவிட்டு தப்பினர். ஆனாலும், அவர்களி துரத்தி சென்ற போலீசார் கடலூர் உழவர் சந்தை அருகே அவர்களை மடக்கிப்பிடித்தனர். அப்போது அங்கு கூடிய பொதுமக்கள், அந்த கொலையாளிகளுக்கு தர்ம அடி கொடுத்தனர். ஒருவழியாக அவர்களிடமிருந்து கொலையாளிகளை மீட்ட போலீசார், புதுநகர் காவல் நிலையத்தில் வைத்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இதில், சுதாகரின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கவே இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
 
பட்டப்பகலில், மக்கள் நடமாடும் பகுதியில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5ஜி சேவையில் ஜியோவை முந்த ஏர்டெல் முனைப்பு!!