Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீம் கிரியேட்டர்களின் சிம்மசொப்பனம் நம்ம தமிழிசை: பங்கமாய் கலாய்த்த பிரபல நாளேடு!!

மீம் கிரியேட்டர்களின் சிம்மசொப்பனம் நம்ம தமிழிசை: பங்கமாய் கலாய்த்த பிரபல நாளேடு!!
, வெள்ளி, 25 ஜனவரி 2019 (11:18 IST)
மீம்ஸ்களின் லேடி சூப்பர் ஸ்டார் தான் நம்ம தமிழிசை என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி செய்தி வெளியிட்டுள்ளது.
 
தற்பொழுது மீம் கிரியேட்டர்கள் அரசியல் பிரமுகர்களின் பேட்டியை கலாய்த்து மீம்ஸ்களாகவும், அவர்கள் பேசியதை எடிட் செய்து அதனை வீடியோவாகவும் இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதற்கு மக்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது. அப்படி அன்றாடம் அதிமுகவில் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களர்களை சந்தித்து பேட்டி கொடுப்பதை வைத்து மீம் கிரியேட்டர்கள் சரமாரியாக மீம்ஸை போட்டுதள்ளுவர்.
webdunia
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டிக்கு மீம் கிரியேட்டர்கள் ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு காத்திருப்பது போல அவர்கள் காத்திருக்கிறார்கள் எனவும் மீம்ஸ்களின் லேடி சூப்பர் ஸ்டார் தமிழிசை எனவும் அவரது பேட்டி எப்போது வரும் அதை வைத்து எப்படி மீம் போடலாம் என மீம் கிரியேட்டர்கள் காத்துக் கொடிருப்பதாகவும் கூறி தமிழிசை சவுந்தரராஜனை விமர்சித்து முரசொலி செய்தி வெளியிட்டுள்ளது. 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொண்டாட்டியை போட்டுத்தள்ள லீவ் கேட்ட மேனேஜர்!! அதிர்ந்துபோன அதிகாரிகள்