Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 28 February 2025
webdunia

அஜித்தை புகழ ரஜினியை கலாய்த்தாரா தமிழிசை? கடுப்பான நெட்டிசன்கள்

Advertiesment
அஜித்தை புகழ ரஜினியை கலாய்த்தாரா தமிழிசை? கடுப்பான நெட்டிசன்கள்
, செவ்வாய், 22 ஜனவரி 2019 (12:15 IST)
அஜித்தின் அறிக்கை குறித்து பேசியபோது, தமிழிசை ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசிருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் பாஜகவுக்கு இழுக்கும் வகையில் தமிழிசை பேசினார்.
 
இந்த நிலையில் தன் மீதும் தனது ரசிகர்கள் மீதும் அரசியல் சாயம் பூசப்படுவதை அறிந்த அஜித், அறிக்கை ஒன்றில் வெளியிட்டு அதில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவான விளக்கத்தை அளித்தார். தமிழிசையின் அஜித் இணைப்பு கனவு ஒரே நாளில் பொய்த்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களும் உலா வருகின்றன.
webdunia
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை அஜித் தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. நடிகர்கள் பலர் இதோ வரேன், அதோ வரேன்ன்னு சொல்லிட்டு இப்போ வரைக்கும் வந்த பாடில்லை என கூறினார். பாஜகவில் இணைந்து கொள்ள அஜித்தை நாங்கள் அழைக்கவில்லை என விளக்கமளித்தார்.
 
தமிழிசை ரஜினியை தான் இப்படி மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிரியரை ரேகிங் செய்த பள்ளி மாணவர்கள்!! பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு