Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொண்டாட்டியை போட்டுத்தள்ள லீவ் கேட்ட மேனேஜர்!! அதிர்ந்துபோன அதிகாரிகள்

Advertiesment
பொண்டாட்டியை போட்டுத்தள்ள லீவ் கேட்ட மேனேஜர்!! அதிர்ந்துபோன அதிகாரிகள்
, வெள்ளி, 25 ஜனவரி 2019 (10:09 IST)
பீகாரில் மனைவியை கொலை செய்ய 2 நாள் விடுப்பு கொடுங்கள் என வங்கி மேலாளர் கடிதம் எழுதியதால் அதிகாரிகள் அதிர்ந்துபோனர்.
பீகார் மாநிலம் பக்ஸரை சேர்ந்தவர் முன்னா பிரசாத். இவர் வங்கியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். கிட்னி பிரச்சனை காரணமாக இவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியை அருகிலிருந்து கவனித்துக் கொள்ள முன்னா அவ்வப்போது விடுப்பு எடுத்து வந்துள்ளார்.
 
அப்படி மனைவியை கவனித்துக் கொள்ள லீவ் வேண்டும் என முன்னா உயரதிகாரிகளிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் லீவ் தர முடியாது என ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டனர்.
 
இதனால் மனமுடைந்த முன்னா, தனது மனைவியை கொலை செய்து, அவருக்கு இறுதி சடங்கு செய்ய 2 நாட்கள் லீவ் தேவை என கடிதம் எழுதி அதனை தனது உயரதிகாரிகளுக்கும், பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்துவிட்டார்.
 
இதனைப்பார்த்து அதிர்ந்துபோன அதிகாரிகள் நீங்க எத்தனை நாள் வேண்டுமானாலும் லீவ் எடுத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டனராம்.
 
இந்நிலையில் தனது செயலுக்கு விளக்கமளித்த முன்னா, எனது மனைவியை கவனித்துக் கொள்ள ஆள் இல்லை. அவளை பார்க்க லீவ் கேட்டால் கொடுக்க மாட்டிங்கிறார்கள். அந்த விரக்தியில் தான் இப்படி கடிதத்தை எழுதினேன் என கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாஃப் ரேட் ஹாஃப் ரேட்ன்னு ஆப்பு வைத்த போலி ஆசிரியை!!!