திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தூத்துக்குடியில் கிராம் சபை கூட்டங்களை நடத்த திமுக தலைவர் ஸ்டாலின் கனிமொழிக்கு அனுமதியும் கொடுத்துவிட்டார்.
இதனால் தூத்துக்குடி தொகுதியில் பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறார் கனிமொழி. அதோடு அங்கிருக்கும் தொழிலதிபர்கள், நாடார் சங்கங்கள் என பல தரப்பினரையும் நேரில் சந்தித்து பேசியும் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுவார் என வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான கீதாஜீவன் எம்எல்ஏ உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வேண்டும் என கனிமொழி 3 வருடங்களுக்கு முன்னரே முடிவெடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, ஸ்ரீவெங்கடேசுவரபுரம் பஞ்சாயத்தை தத்தெடுத்தது, ரூ.16 லட்சம் ஒதுக்கி பல வளர்ச்சி பணிகளை செய்துள்ளார். ஸ்டெர்லைட் பிரச்சனையின் போதும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
மேலும், தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் கனிமொழிக்கு செல்வாக்கும் உயர்ந்துள்ளதால் திமுகவினர் அவரை நிச்சயம் அந்த தொகுதியில் ஜெயிக்க வைக்க வேண்டும் என உள்ளனர்.