Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சங்கீத வித்வான்கள் என்றால் கேவலமா? ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் பதிலடி

Advertiesment
சங்கீத வித்வான்கள் என்றால் கேவலமா? ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் பதிலடி
, வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (14:59 IST)
திமுகவின் எதிரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று நெட்டிசன்கள் அடிக்கடி பதிவுகளும் மீம்ஸ்களும் போட்டு வருகின்றனர். சமீபத்தில் இந்து திருமணங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மு.க.ஸ்டாலினுக்கு அவரது கூட்டணி கட்சியில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது

இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கருத்து கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'இந்த பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படாத, உதவாக்கரை பட்ஜெட் என்றும், சங்கீத வித்வான் பாடுவதை போல சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்னார் ஓ.பி.எஸ் என்றும், இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட் அல்ல என்றும் வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்தும் பட்ஜெட் என்றும் விமர்சனம் செய்தார்.

webdunia
மு.க.ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயகுமார், 'சங்கீத வித்வான்கள் என்றால் கேவலமா? அவர்கள் அனைவரும் ஞானம் பெற்றவர்கள். 7 சுரங்களை பற்றி தெரியாதவர்கள் சங்கீத வித்வான்களை பற்றி பேசலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நச்சுனு நாலு போனு... ஒரே நேரத்தில் இறக்கி மோட்டோ அதகளம்!!