Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையின் முக்கிய பகுதியில் கனமழை: சாலைகளில் மழை நீர்

சென்னையின் முக்கிய பகுதியில் கனமழை: சாலைகளில் மழை நீர்
, ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (07:17 IST)
சென்னையின் முக்கிய பகுதியில் கனமழை
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் திடீரென சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் நகர் முழுவதும் வெயிலின் வெட்கை தணிந்து குளிர்ச்சியானது.
 
சென்னையின் முக்கிய பகுதிகளான வேளச்சேரி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் போன்ற பகுதிகளிலும், பூவிருந்தவல்லி, ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர், போரூர், திருமுல்லைவாயில், பட்டாபிராம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. மேலும் பெருங்களத்தூர், வண்டலூரில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது 
 
மேலும் மெரினா, சாந்தோம், மந்தைவெளி, மயிலாப்பூர், பெருங்குடி, கந்தன் சாவடி, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அடையாறு, திருவான்மியூர், அசோக் நகர், ஈசிஆர் சாலை, தி.நகர், மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மத்திய கைலாஷ், ஆலந்தூர், கிண்டி, கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, தாம்பரம், அனகாபுத்தூர், திருவேற்காடு, போரூர், ஆவடி, புழல், செங்குன்றம், திருவள்ளூர், மணவாள நகர், கடம்பத்தூர் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இருப்பினும் வாகனப்போக்குவரத்து இல்லை என்பதால் எந்தவித பிரச்சனையும் இல்லை.
 
ஏற்கனவே இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு, தமிழகம் புதுச்சேரி கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான கடலோர மாவட்டங்களில், மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சௌதி அரேபியாவில் பொது இடத்தில் சாட்டையடி - தண்டனையை கைவிடும் அரசு