Publish Date: Tue, 29 Jan 2019 (09:59 IST)
Updated Date: Tue, 29 Jan 2019 (10:17 IST)
போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியிடை நீக்க செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்த அரசு ஊழியர்களும், அரசு பள்ளி ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு நீதிமன்ற காவலில் உள்ள 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரகியாக உத்தரவிட்டுள்ளது. அரசு எங்கள் மீது இதே மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருந்தால் எங்களின் போராட்டம் இன்னும் தீவிரமடையும் என ஆசிரியர்கள் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.