விஜய்யின் கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகளுக்கு பிறகு, அவரது நாமக்கல் கூட்டத்திலும் இதேபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. நாமக்கல் பிரச்சார கூட்டத்தில் மூச்சுத்திணறல் காரணமாகப் பலர் பாதிக்கப்பட்டதாக ஒரு எஃப்.ஐ.ஆர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாமக்கல்லில் காலை 11 மணி முதல் 12 மணிக்குள் கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விஜய் வேண்டுமென்றே தாமதமாக வந்தார் என கூறப்படுகிறது. மக்களிடையே தேவையற்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினால் கூட்ட நெரிசல் ஏற்படும் என காவல்துறை அப்போது எச்சரிக்கை செய்திருந்தும், விஜய் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது.
பல மணி நேரமாக வெயிலில் காத்திருந்த மக்கள் தாகத்தால் சோர்வடைந்ததாகவும், அதிக கூட்டம் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் மக்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாமக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.