தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் மோடியின் வருகை ரத்து!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (10:40 IST)
தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு. 

 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் அதிகரித்து வருவதற்கு காரணமாக அரசியல் நிகழ்ச்சிள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் பிரதமர் மோடி வரும் 12 ஆம் தேதி தமிழகம் வரவிருப்பதாகவும் அன்றைய தினம் மதுரையில் பொங்கல் நிகழ்ச்சி விழாவில் அவர் கலந்து கொள்வார் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். 
 
ஆனால் தற்போது உள்ள சூழ்நிலை காரணமாக பிரதமரின் பொங்கல் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிகழ்ச்சி நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
 
இதனிடையே தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. புதுச்சேரியில் தேசிய இளைஞர் தின விழாவை பிரதமர் துவக்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக காணொலி காட்சி மூலமாக நிகழ்ச்சியை பிரதமர் தொடங்கி வைப்பார் என தலைமை செயலாளர் தெரிவித்திருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 22 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் தகவல்...!

25 குழந்தைகள் மரணத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்: இருமல் மருந்து விவகாரம் குறித்து ஈபிஎஸ்..!

கோல்ட்ரிப் மருந்து விவகாரம்! மத்திய அரசீன் அலட்சியமே காரணம்! - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

ஆரம்பமே 42% கூடுதல் மழை.. இன்னும் அதிகரிக்கும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் ஜெலன்ஸ்கி - புதின்? - ட்ரம்பின் அடுத்த போர்நிறுத்த வியூகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments