பஞ்சாப் மாநிலம் சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தில் தடை ஏற்பட்டதை கண்டித்து பஞ்சாப் காங்கிரஸ் அரசு பதவி விலக வேண்டுமென கூறி கரூரில் பாஜக வினர் மெழுகுவர்த்தி ஏந்தி தர்ணா ! காங்கிரஸ் கட்சி இந்தியாவினை விட்டு வெளியேறுமாறு நூதன ஆர்பாட்டம்.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு சென்ற பிரதமர் மோடி பயணத்தில் திடீர் தடை ஏற்பட்டது. சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு செல்கையில் போராட்டக்காரர்களால் பயணம் தடை ஏற்பட்டது. பிரதமர் மோடி வருகையில் பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்தி ஜனநாயக விரோத செயலில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டதாகக் கூறி பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் தலைமையில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 30 நிமிடத்திற்கு மேல் நீடித்த இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பாஜக மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து பாஜக நிர்வாகிகள் பலரும் தரையில் அமர்ந்து மீண்டும் தங்களது தர்ணா போராட்ட்த்தினை தொடங்கினர்.
மேலும், காங்கிரஸ் கட்சி இந்த இந்தியாவினை விட்டு வெளியேற வேண்டுமென்றும், போலி விவசாயிகள் பெயரில் பஞ்சாப் மாநிலத்தில் ஆர்பாட்டத்தினை ஏற்படுத்திய பஞ்சாப் காங்கிரஸ் ஆட்சியை கலைக்க வேண்டுமென்றும், சோனியா காந்திக்கும் கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்ப பட்டது. மேலும், பஞ்சாப் மாநில அரசிற்கும், பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்கும், அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கும் எதிரான முழக்கங்கள் எழுப்பியவாறும் தர்ணா நீடித்த நிலையில், சுமார் 1 மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர் அனைவரும் மெழுகுவர்த்திகளை அனைத்து விட்டு சென்றனர். பாஜக கட்சியின் இந்த திடீர் ஆர்பாட்டத்தினையடுத்து கரூர் மையப்பகுதியான லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நீடித்தது.