Publish Date: Tue, 08 Jun 2021 (08:41 IST)
Updated Date: Tue, 08 Jun 2021 (08:43 IST)
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் இன்று அண்ணா அறிவாலயம் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதை தொடர்ந்து கட்சியின் தோல்விக்கு கமல்ஹாசனை குற்றம் சாட்டிய பல பிரமுகர்கள் கட்சியிலிருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவ்வகையில் கட்சியிலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் திமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று டாக்டர் மகேந்திரன் அண்ணா அறிவாலயம் செல்வதாகவும், அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Prasanth Karthick
Publish Date: Tue, 08 Jun 2021 (08:41 IST)
Updated Date: Tue, 08 Jun 2021 (08:43 IST)