Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்லீரலை பலப்படுத்தும் கொத்தமல்லி!

Advertiesment
கல்லீரலை பலப்படுத்தும் கொத்தமல்லி!
, திங்கள், 7 ஜூன் 2021 (23:46 IST)
கல்லீரலின் சக்தியானது கண்களில் முடிவடைகிறது. அதனால்தான் கல்லீரல் பாதிப்பான மஞ்சள் காமாலையை கண்ணைப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடிகிறது. பித்தநீர்ச் சுரப்பைத் தூண்டும் கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல். அத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு கல்லீரல்.
 
 
கொத்தமல்லி வயிற்றில் ஏற்படும் தொல்லைகளுக்கு தீர்வாக காணப்படுகிறது. எனவே, வயிறு கோளாறுகளை எந்த வடிவத்தில் அனுபவிக்கும் போதும், கொத்தமல்லி இலைகளால் டீ செய்து குடித்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.
 
5 கிராம் கொத்தமல்லி விதையை (தனியா) இடித்து அரைலிட்டர் நீரில் விட்டு 100 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை கலந்து காலை, மாலை சப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம் செரியாமையால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை நீங்கும்.
 
உடலுக்கு தேவையான சக்திகளை சேமித்து வைத்து தேவைப்படும்போது கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல். இது வீக்கமோ,  சுருக்கமோ அடைந்து பாதிக்கப்பட்டால், உடலானது பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இதனால் கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த நிவாரணியாகும்.
 
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைசுற்றல் போன்றவற்றை நீக்கும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை  குறைக்கும். இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துகொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 
கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த அதிகரிப்பினால் உண்டாகும் பிதச்சூடு தணியும்.
 
காய்ச்சலாலும், குடல் அலர்ஜியாலும் பித்தம் அதிகரித்து வயிற்றில் சளி ஏற்பட்டு அதனால் நாவில் சுவையின் பொதுவாக பித்த அதிகரிப்பினால் வருவது. இதற்கு கொத்தமல்லி இலை, சீரகம், சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து  கஷாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி, பித்த கிறுகிறுப்பு நீங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் மோர்