Publish Date: Tue, 07 Apr 2020 (14:44 IST)
Updated Date: Tue, 07 Apr 2020 (14:47 IST)
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் தாக்கத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்துவரும் நிலையில், இந்தியாவில் வரும் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கொரோனா தடுப்பு நிதியாக பிரதமரின் நிவாரண நிதிக்கும், மாநில அரசுகளின் முதல்வரின் நிவாரண நிதிக்கும் பலரும் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் நிதியை தமிழக அரசு புறக்கணித்தது பற்றி முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு தமிழக முதல்வர், கொரொனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களின் நிதியில் தலா 1 கோடியை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார்.