கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசாங்கம் நிதிகளைப் பெற விரும்பினால் அதற்கு பல வழிகள் உள்ளன எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைப்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க இந்தியாவிலும் வரும் 14 ஆம்தேதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியப் பொருளாதாரம் பெருமளவு நலிவடைந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக உயர்ந்து வருகிறது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் குணமடைந்து வருகின்றனர்.
ஏற்கனவே, கொடோனா தடுப்பு நிதிக்காக, டாட்டா நிறுவனம், விப்ரோ நிறுவன, கோடெக் மகெந்திரா, ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி, நடிகர் அக்ஷ்ய்குமார் ஆகியோர் பிரதமர் மோடி கேட்டுக்கொண்ட படி தாராளமான உதவி செய்துள்ளனர். மற்ற நடிகர்கள்,நட்சத்திரங்கள் பலரும் உதவி செய்துவருகின்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற அமைச்ச்ரவை கூட்டத்தில், ‘’அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எம்பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கிடையாது என முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், எம்பிக்கள் அனைவருக்கும், ஒருவருடத்திற்கு சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் நிதி சிக்கன் நடவடிக்கையாக பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் தெரிவித்துள்ளார்.
அதேபோல், குடியரசுத்தலைவர், துணைக் குடியரசுத்தலைவர், ஆளுநர்களும் 30 சதவீத ஊதியத்தை பிடித்தம் செய்ய தாமாக முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தற்போது கார்த்தி சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
இந்த நிலையில், கொரொனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசு நிதிகளைப் பெற அதற்குப் பல வழிகள் உண்டு. எம்பிக்களின் நிதிகளில் நிறுத்தி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், இது நாடாளுமன்ற `உறுப்பினர்களின் அதிகாரத்தைக் குறைப்பது போலவும், அதிபர் ஆட்சிமுறை போன்ற ஒன்றை மறைமுகமாக புகுத்துவதாக உள்ளது.
இந்த அரசாங்கம் பிரதமரின் விளம்பரங்களும், தற்பெருமைக்கும் செலவு செய்யும் கோடிக்கணக்கான ரூபாய்களை வீணாக்கும் விதமாக இருக்குமிந்த திட்டங்களை நிறுத்தினாலே அதற்கான நிதி கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.