Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குரங்கை காப்பாற்ற முயன்ற ஓட்டுனர்! – நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்!

குரங்கை காப்பாற்ற முயன்ற ஓட்டுனர்! – நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்!
, வெள்ளி, 17 டிசம்பர் 2021 (15:31 IST)
பெரம்பலூரில் அடிபட்டு கிடந்த குரங்கை காப்பாற்றிய கார் ஓட்டுனர் பிரபுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

பெரம்பலூரை சேர்ந்த பிரபு என்ற நபர் அப்பகுதியில் கார் ஓட்டுனராக இருந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல அவர் சவாரிக்கு சென்று கொண்டிருந்தபோது அந்த சாலையில் குரங்கு ஒன்று அடிப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளது.

உடனடியாக ஓடி சென்று அந்த குரங்கிற்கு முதலுதவிகள் செய்த பிரபு அந்த குரங்கை உயிருடன் காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவத்தை அப்பகுதி வழியாக சென்ற சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் பிரபுவை நேரில் வரவழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது நல் உள்ளத்தை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய பிரபு “குரங்கை காப்பாற்றியபோது என்னை வீடியோ எடுத்தது கூட எனக்கு தெரியாது. அது எதிர்பாரத விதமாக நடந்தது. ஒரு குரங்கு என்னை இன்று இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. காட்டுக்குள் இருந்து வரும் வன விலங்குகளை யாரும் துன்புறுத்தாதீர்கள், முடிந்தால் வனவிலங்குகளுக்கு உணவு அளியுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வட்டி விகிதத்தை உயர்த்திய எஸ்.பி.ஐ வங்கி !