Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மே 1ம் தேதி கிராமசபை கூட்டம்; திருச்சியில் கலந்து கொள்ளும் முதல்வர்!

Advertiesment
Grama Sabai Kootam
, வியாழன், 28 ஏப்ரல் 2022 (08:55 IST)
மே 1 உழைப்பாளர் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி தற்போது மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தன்று கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் ஊராட்சிகளின் வரவு செலவு அறிக்கை, பணிகளில் முன்னேற்ற நிலைமை, மத்திய – மாநில அரசின் திட்டங்களுக்கான பயனாளர்கள் தேர்வு உள்ளிட்டவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மே 1ல் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி பகுதியில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி மின்னல் வேக பதிலடிதான்..! – விளாடிமிர் புதின் விடுத்த எச்சரிக்கை!