Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடியாரை சந்திக்கும் ஸ்டாலின்!

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (08:52 IST)
முதல்வர் பழனிசாமியை நேரில் சந்திக்க உள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த  நிலையில் அவர் காலமானார். அவருக்கு வயது 93 என்பது குறிப்பிடத்தக்கது.  
 
தாயார் தவுசாயம்மாள் மறைவை அடுத்து உடனடியாக சொந்த ஊர் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தற்போது மீண்டும் அரசு பணிகளை கவனிக்க சென்னை திரும்பியுள்ளார். 
 
இந்நிலையில், முன்னரே தொலைபேசி வாயிலாக எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த ஸ்டாலின் தற்போது அவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இன்று செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments