Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த செய்தியைக் கேட்டதும் என் நெஞ்சே உறைந்துவிட்டது – ஸ்டாலின் இரங்கல்!

Advertiesment
அந்த  செய்தியைக் கேட்டதும் என் நெஞ்சே உறைந்துவிட்டது – ஸ்டாலின் இரங்கல்!
, சனி, 17 அக்டோபர் 2020 (16:33 IST)
சைதாப்பேட்டை தொகுதி திமுக எம் எல் ஏ மா கா சுப்ரமண்யத்தின் மகன் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதில் அரசியல் பிரமுகர்களும் தப்பவில்லை. திமுக எம் எல் ஏ ஜெ அன்பழகன் மற்றும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் ஆகியோர் கொரோனாவால் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது சைதாப்பேட்டை எம் எல் ஏ மா. சுப்பிரமணியத்தின் இரண்டாவது மகன் அன்பழகன் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

மா க சுப்பிரமணியத்துக்கு 2 வாரங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு உறுதியானது. அவரது குடும்பத்தில் அவர் மனைவி மற்றும் இளைய மகன் அன்பழகனுக்கும் உள்ளிட்டோருக்கும் தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அன்பழகன் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இது திமுக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்த திமுக தலைவர் ஸ்டாலின் சுப்ரமண்யன் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தன் டிவிட்டர் பக்கத்தில் ‘ மா.சுப்பிரமணியனின் மகன் அன்பழகன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது, என் நெஞ்சை உறைய வைத்துவிட்டது. ஏ ற்கெனவே உடல்நலம் குன்றி இருந்த அன்பழகனை மா.சுப்பிரமணியனும், அவரது துணைவியார் காஞ்சனா சுப்பிரமணியனும், கண்ணின் மணி போல் இத்தனை ஆண்டுகள் காத்துவந்ததை கரோனா வந்து பறித்துச் சென்று விட்டது.மா.சு. இணையருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. ஊரார்க்கு ஒன்று என்றால், உடனே ஓடோடிப் போய் நிற்கும் மா.சு.வுக்கு, இப்படி ஒரு சோதனையா?... அன்பழகன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்!’ என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் மதிப்பெண் மட்டுமே தகுதியென்றால் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நீக்கி விடலாமா ? - சீமான் கேள்வி