Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு! – முதல்வர் தொடங்கி வைத்தார்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (11:06 IST)
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் பணமும் அளிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பணத்தை தவிர மற்ற பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. 2.15 கோடி குடும்பங்களுக்காக ரூ.1,088 கோடி செலவில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இன்று சென்னை தலைமை செயலகத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகள் வாயிலாக வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிடம் பாய்ச்சல்.. சீனாவிடம் பதுங்கல்! வரிவிதிப்பை சீனாவுக்கு மட்டும் 90 நாட்கள் நீட்டித்த அமெரிக்கா!

இந்தியாவுக்கு வரி போட்டதால் ரஷ்யாவுக்கு பாதிப்பு.. டொனால்ட் டிரம்ப்

போக்குவரத்தை சரிசெய்யும் ‘குட்டிப்புலி’ ரோபோ!.. தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்..!

தனியார்ல ஏகப்பட்ட சலுகைகள் இருக்கு.. லிஸ்ட் போட்ட மாநகராட்சி! - கைவிடப்படுமா தூய்மை பணியாளர்கள் போராட்டம்?

வேலைக்கு செல்லாத குடும்ப தலைவிகளுக்கு ரூ.40,000 வழங்கும் திட்டம்: இன்று முதல் அமல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments