Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் அம்மா மினி க்ளினிக்குகள் மூடல்! – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் அம்மா மினி க்ளினிக்குகள் மூடல்! – அமைச்சர் அறிவிப்பு!
, செவ்வாய், 4 ஜனவரி 2022 (09:44 IST)
கடந்த அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களும் மருத்துவ வசதி பெறும் வகையில் அம்மா மினி கிளினிக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த க்ளினிக்குகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு சுகாதார பணியாளர் பணியாற்றுவார்கள் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் “அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அம்மா மினி க்ளினிக்குகளில் செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்படாததால் அவை செயல்படாமல் இருந்து வந்தன. மினி க்ளினிக்குகளுக்காக நியமிக்கப்பட்ட 1820 மருத்துவர்களும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஓராண்டு அடிப்படையில் தற்காலிக அமைப்பாகதான் அம்மா மினி க்ளினிக் தொடங்கப்பட்டது. தற்போது நடமாடும் மருத்துவ சேவை உள்ளிட்டவை மூலம் மக்கள் பயன்பெற்று வருவதால், அம்மா மினி க்ளினிக்குகள் மூடப்பட்டுவிட்டன” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

37 ஆயிரமாக உயர்ந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா!