Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இப்படி அரைவேக்காடாய் செஞ்சா பிரச்சினைதான்! – எடப்பாடியார் அரசு குறித்து மு.க.ஸ்டாலின்!

இப்படி அரைவேக்காடாய் செஞ்சா பிரச்சினைதான்! – எடப்பாடியார் அரசு குறித்து மு.க.ஸ்டாலின்!
, செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (14:35 IST)
அரியர் தேர்வுகள் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசு அரைவேக்காட்டுத்தனமாய் செயல்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்ட நிலையில், அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவை ஏற்க முடியாது என ஏஐசிடிஇ தெரிவித்துள்ள நிலையில், அரசின் உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலைகழகம் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”அரியர்ஸ் தேர்வு இல்லாமல் தேர்ச்சி என்பதை ஏஐசிடிஇ எதிர்த்திருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதை செய்தாலும் அரைவேக்காட்டுத்தனம், அவசர கோலமாய் செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதிப்பை உண்டாக்குகிறார். கல்வியாளர்களின் கருத்தை கேட்காமல் அரசு நடத்திய கபட நாடகத்தால் மாணவர்களுக்கும் மன உளைச்சல். இனியும் மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நல்லவர் பின்னரே இனி நாடே வரும் தன்னாலே... அரசியலுக்கே வரா ரஜினிக்கு போஸ்டர்!