தமிழக பல்கலைகழக இறுதி ஆண்டு தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக கல்லூரிகளில் இறுதி ஆண்டு தேர்வு தவிர மற்ற செமஸ்டர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இறுதியாண்டு தேர்வுகள் நடத்தப்படாமல் இருப்பதால் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இறுதி ஆண்டுகளை தேர்வுகளை உடனடியாக நடத்த தமிழக உயர்கல்வி துறை திட்டமிட்ட நிலையில் செப்டம்பர் 15 முதல் இறுதியாண்டு தேர்வுகளை நடத்த பல்கலைகழகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழகத்திற்குள் உள்ள மாணவர்களுக்கு நேரடியாக எழுத்து தேர்வு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அனைவருக்கும் ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடத்த உயர்கல்வி துறை பல்கலைகழகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.