கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை தற்போது தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
கொரோனா காரணமாக உலகம் முழுவதிலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தங்கம் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியது. இதனால் வேகமாக விலை உயர்ந்த தங்கம் கடந்த மாதம் உச்சபட்சமாக 40 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை கடந்த இரு நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் இதன் விலை குறைந்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 24 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 4885 ரூபாய்க்கு விற்பனை ஆனது.