Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சித்ரா பௌர்ணமியில் குமரியில் நடக்கும் அதிசயம்! ஒரே நேரத்தில் மறையும் சூரியன், உதிக்கும் சந்திரன்!

Advertiesment
Kanyakumari

Prasanth Karthick

, செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (08:38 IST)
இன்று சித்ரா பௌர்ணமி நாள் தமிழகம் முழுவதும் பல வகையில் சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் குமரியில் நடக்க இருக்கும் அதிசயத்தை காண மக்கள் அங்கே குவிந்து வருகின்றனர்.



பொதுவாக கன்னியாக்குமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் நின்று சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் காண முடியும். இவ்வாறு கடலுக்கு மேல் சூரிய உதயம், அஸ்தமனம் இரண்டையும் கன்னியாக்குமரியில் மட்டுமே காண முடியும். இதில் மற்றொரு சிறப்பு ஆண்டில் ஒருமுறை சூரிய அஸ்தனமாகும் அதேசமயம் சந்திர உதயத்தையும் ஒரே நேரத்தில் காண முடியும். இது சித்திரா பௌர்ணமி நாளில் நடைபெறுகிறது.

இன்று சித்திரா பௌர்ணமி என்பதால் இன்று ஒரே சமயத்தில் அரபிக்கடலில் சூரிய அஸ்தமனமும், வங்க கடலில் சந்திர உதயத்தையும் காண முடியும். இதனால் இந்த அரிய காட்சியை காண மக்களும், சுற்றுலா பயணிகளும் குமரிமுனைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இஸ்லாமியர் குறித்து பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையம் மறுப்பு கருத்து தெரிவிக்க மறுப்பு!!