Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமித்ஷாவின் தமிழ்நாடு பிரச்சார பயணங்கள் ரத்து!

அமித்ஷாவின் தமிழ்நாடு பிரச்சார பயணங்கள் ரத்து!

sinoj

, புதன், 3 ஏப்ரல் 2024 (20:45 IST)
ஏப்ரல் 4 மற்றும் 5 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்ட   நிலையில், அவரது அனைத்து பிரசார பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று   தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார். 
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில்,  தமிழ் நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
 
 
இந்த நிலையில், ஏப்ரல் 4 மற்றும் 5 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அவரது அனைத்து பிரசார பயணங்களும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
உடல் நலக்குறைவு காரணமாக  நாளை  மற்றும் நாளை மறுநாள் மதுரை, தேனி, சிவகங்கை, கன்னியாகுமரியில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள திட்டமிருந்த ( ஏப்ரல் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில்)   பரப்புரை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தையல் கடையில் தீ விபத்து...மூச்சுத்திணறி 7 பேர் உயிரிழப்பு