Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மைனாரிட்டி அதிமுக அரசு: வெளிச்சம் போட்டுக்காட்டிய எம்எல்ஏக்கள் கூட்டம்!

Advertiesment
மைனாரிட்டி அதிமுக அரசு: வெளிச்சம் போட்டுக்காட்டிய எம்எல்ஏக்கள் கூட்டம்!
, புதன், 3 ஜனவரி 2018 (16:49 IST)
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா திமுக தலைமையிலான அரசை குறிப்பிடும்போது எப்பொழுதும் மைனாரிட்டி திமுக அரசு என குறிப்பிடுவது வழக்கம். ஆனால் தற்போது ஜெயலலிதா இல்லாத சூழலில் அவரது அதிமுக அரசு மைனாரிட்டி அரசாக உள்ளது.
 
வரும் 8-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட உள்ளது. இந்நிலை அதிமுக எம்எல்ஏகக்ள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 102 எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்துகொண்டதாக தகவல்கள் வருகின்றன.
 
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், 104 எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு வந்ததாகவும், 7 பேர் சில காரணங்களால் வர முடியவில்லை எனவும் அவர்களும் தங்களுடனையே ஒற்றுமையாக இருப்பதாக கூறினார்.
 
மெஜாரிட்டி ஆட்சிக்கு 117 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. ஆனால் அதிமுகவுக்கு தற்போது சபாநாயகரையும் சேர்த்து 111 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. இதன் மூலம் அதிமுக மைனாரிட்டி அரசை நடத்துவது வெளிச்சமாகியுள்ளது. இது கடந்தமுறை நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தின் போது கூட வெளிப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ. சிகிச்சை பெற்றதை நான் பார்க்கவே இல்லை - எம்பாமிங் மருத்துவர் சுதா பேட்டி