Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மு.க.ஸ்டாலினுக்கு எல்லாமே 'மாதிரி'தான்: அமைச்சர் உதயகுமார்

Advertiesment
மு.க.ஸ்டாலின்
, வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (09:39 IST)
அதிமுக கூட்டணி குறித்து கடுமையாக விமர்சனம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:
 
அதிமுக ஆட்சியை கலைத்துவிடுவேன், வீட்டுக்கு அனுப்பிவிடுவேன், ஆட்சியை மாற்றுவேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் லட்சம் முறை கூறிவிட்டார். ஆனால் அது எதுவுமே இதுவரை நடக்கவில்லை. இனிமேலும் நடக்காது. அவர் 'மாதிரி சட்டசபை'யை கூட்டுகிறார், 'மாதிரி கிராமசபை'யை கூட்டுகிறார், ஒரு மாதிரியாக பேசுகிறார், மொத்தத்தில் அவர் ஒரு மாதிரியாக மாறிவிட்டாரோ என தமிழ்நாட்டு மக்கள் சந்தேகப்படுகின்றனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
 
webdunia
மேலும் 'அதிமுக அமைத்துள்ள கூட்டணி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மாவின் ஆசியால் அமைந்த கூட்டணி, இந்த கூட்டணியால் இன்னும் பல திருப்பங்கள் ஏற்படும், அந்த திருப்பங்கள் தமிழ்நாட்டு மக்களின் நலன் உடையதாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்
 
அமைச்சரின் இந்த கருத்துக்கு மு.க.ஸ்டாலின் விரைவில் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானுக்கு நதி நீர் கிடையாது – மத்திய அரசு அதிரடி முடிவு !